126. அருள்மிகு சற்குண நாதேஸ்வரர் கோயில்
இறைவன் சற்குண நாதேஸ்வரர்
இறைவி சர்வாங்க நாயகி
தீர்த்தம் எம தீர்த்தம்
தல விருட்சம்  
பதிகம் திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருக்கருவிலி கொட்டிட்டை, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'கருவேலி' என்று அழைக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள பூந்தோட்டம் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்து நாச்சியார் கோயில் செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. சென்றால் கூந்தலூர் என்னும் ஊர் வரும். அங்கிருந்து கைகாட்டி வலதுபுறம் திரும்பி அரசலாறு பாலம் கடந்து 2 கி.மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம். அன்னியூருக்கு தெற்கே 4 கி. மீ. தெலைவு. பேருந்து வசதிகள் குறைவு. பிற வாகனங்களில் செல்வது சிறந்தது.
தலச்சிறப்பு

TiruKaruvili Gopuramசற்குணன் என்னும் அரசன் வழிபட்டு பிறவிப் பிணியை போக்கிய தலமாதலால் 'இனி கரு இல்லை' அதாவது பிறப்பு இல்லை என்னும் கருத்தில் 'கருவிலி' என்னும் பெயர் பெற்றது. கோயில் பெயர் கொட்டிட்டை. கொடுகொட்டி என்பது சிவ நடனம். அது மருவி 'கொட்டிட்டை' என்று ஆனது.

TiruKaruvili AmmanTiruKaruvili Moolavarமூலவர் 'சற்குண நாதேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாளும் 'சர்வாங்க நாயகி' என்னும் திருநாமத்துடன், பெரிய வடிவத்தில் அழகாக காட்சித் தருகின்றாள்.

இந்திரன், தேவர்கள், உருத்திரக் கணங்கள் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com